விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

INDvsWI 4வது டி20 : யஷஸ்வி - கில் ஜோடி அபாரம்; 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

புளோரிடாவில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தது.

IND vs WI 4வது டி20 : டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற உள்ளது.

'15 ஆண்டுகளாக புவனேஸ்வரை எதிர்கொள்ள தடுமாறினேன்' : ஆரோன் ஃபின்ச்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை எதிர்கொள்ள மிகவும் சிரமப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்; பின்னணி என்ன?

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கு சில மணி நேரங்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அயர்லாந்து தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமனம்

அயர்லாந்து டி20 தொடருக்கான ஜஸ்ப்ரீத் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்

வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்தது. இந்த அணிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்குவார்.

'இன்ஸ்டாகிராம் வருமானம் குறித்த தகவல் உண்மையில்லை' : விராட் கோலி மறுப்பு

பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என தன்னைக் குறித்து வெளியான தகவலை மறுத்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தொடக்க பார்ட்னர்ஷிப்பில் தொடரும் சிக்கல்; சரி செய்யுமா இந்திய கிரிக்கெட் அணி?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலுக்கு மீண்டும் தற்காலிக தடை

ஏற்கனவே தாமதமாகி வரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், வெள்ளிக்கிழமை தேர்தலுக்கு தடை விதித்தது.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க அம்பதி ராயுடு ஒப்பந்தம்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பதி ராயுடு, வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) விளையாட உள்ளார்.

எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு அகில இந்திய அளவில் புச்சி பாபு தொடரை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

11 Aug 2023

ஆஷஸ் 2023

ஆஷஸ் தொடரில் நடந்த அவமானம்; பீர் குடிக்காதது குறித்து ஸ்டீவ் ஸ்மித் வருத்தம்

ஆஷஸ் 2023ல், போட்டியை நடத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இரண்டு டெஸ்ட்களில் தோல்வியை தழுவினாலும், பின்னர் சமாளித்து தொடரை 2-2 என சமன் செய்தது.

முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணியின் நேரடி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியது ஸ்போர்ட்ஸ்18

முதன்முறையாக, ஸ்போர்ட்ஸ்18 வியாகாம் பிரத்தியேகமாக இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு தொடருக்கான நேரடி ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது.

வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஷகிப் அல் ஹசன் நியமனம்

வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன், வரவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எது வெற்றிகரமான அணி? ஐசிசி கோப்பையை வெல்ல முடியாத இந்தியா குறித்து டேரன் சமி கருத்து

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் சமி, இந்திய கிரிக்கெட் அணி வலுவாக இருந்தாலும், 10 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாதது குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர்களில் விராட் கோலி முதலிடம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் இந்தியராக உள்ளார்.

'கேப்டன்சி எனக்கு இரண்டாம்பட்சம்தான்' : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா

இன்னும் இரண்டு மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கோப்பை போட்டிகளில் விளையாட தயாராகி வரும் நிலையில், கேப்டன் ரோஹித் ஷர்மா அணிக்கு வெற்றியை பெற்றுத் தர கடுமையாக தயாராகி வருகிறார்.

முதல்முறையாக இந்திய கிரிக்கெட் அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர்; வைரலாகும் புகைப்படம்

ஆசிய கோப்பை 2023 நிகழ்வின் போது முதல் முறையாக, இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற உள்ளது.

'யுவராஜ் சிங்கிற்கு பிறகு சரியான வீரரே இல்லை' : நம்பர் 4 குறித்து ரோஹித் ஷர்மா பரபரப்பு பேச்சு

யுவராஜ் சிங் ஓய்விற்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான நான்காவது இடத்தில் விளையாட சரியான பேட்டர் யாரும் அமையவில்லை என்று கேப்டன் ரோஹித் ஷர்மா வியாழக்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தார்.

இங்கிலாந்து ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர்; ப்ரித்வி ஷா சாதனை

ப்ரித்வி ஷா இங்கிலாந்தில் நடந்து வரும் கவுண்டி கிரிக்கெட் அணிகளுக்கான ஒருநாள் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார்.

இந்திய ஹாக்கி சப் ஜூனியர் அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளர்கள் நியமனம்

இந்திய ஹாக்கி அணியின் சப்-ஜூனியர் ஆடவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சர்தார் சிங் மற்றும் சப்-ஜூனியர் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தீ விபத்து; உலகக்கோப்பை போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா?

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடருக்காக, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி போட்டி: வந்தே மாதரம் பாடிய ரசிகர்கள்; வைரலாகும் காணொளி

சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் ரவுண்ட் ராபின் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

50 ஓவர் உலகக்கோப்பைத் தொடரின் அட்டவணையில புதிய மாற்றங்களைச் செய்திருக்கும் பிசிசிஐ

2023-ம் ஆண்டிற்கான 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது பிசிசிஐ. அந்த அட்டவணையில் தற்போது சில மாற்றங்களைச் செய்திருக்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

ஆசிய சாம்பியன்ஷிப் இந்தியா-பாகிஸ்தான் ஹாக்கி போட்டியினை காணச்செல்லும் முதல்வர் 

7வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டி, ஆகஸ்ட்.,3ம்தேதி துவங்கி சென்னை எழும்பூரிலுள்ள, மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வரும் 12ம் தேதி வரை நடக்கவுள்ளது என்று அறிவிப்புகள் வெளியானது.

09 Aug 2023

பிசிசிஐ

2021-22 நிதியாண்டில் ரூ.1,159 கோடி வருமான வரி செலுத்திய BCCI

2022-23 நிதியாண்டிற்கான வருமான வரித்தாக்கல் செய்வதற்கான காலக்கெடு கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இந்நிலையில், 2021-22 நிதியாண்டில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), எவ்வளவு வருமான வரி செலுத்தியது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-வது 20-ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று கயானாவில் நடைபெற்றது.

சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் 18 பதக்கங்களைக் குவித்த இந்திய வீரர்கள்

நான்கு நாடுகள் பாரா பாட்மின்டன் தொடரானது கடந்த ஆகஸ்ட் 2 முதல் 6-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெற்று வந்தது. இந்தத் தொடரில், இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் 18 பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார்கள்.

கிரிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக டி20 போட்டிகளில் 10 சதங்களை விளாசிய பாபர் அசாம்

இலங்கையில் நடைபெற்று வரும் 'லங்கா ப்ரீமியர் லீக்' டி20 கிரிக்கெட் தொடரில் கொலும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம். நேற்று கேல் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 59 பந்துகளில் சதமடித்து அசத்தியிருக்கிறார் அவர்.

"ஹர்திக் பாண்டியா செய்த மிக பெரிய பிழை"- ராபின் உத்தப்பா அதிருப்தி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது இந்திய அணி.

உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிய முதியவர்

83 வயதான ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஸ்டீல் முதுகில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டருடன் கிரிக்கெட் விளையாடும் காணொளி வைரலாகி வருகிறது.

இலங்கை பிரீமியர் லீக் : டி20 கிரிக்கெட்டில் 10வது சதத்தை பூர்த்தி செய்த பாபர் அசாம்

இலங்கை பிரீமியர் லீக்கில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டில் தனது 10வது பதிவு செய்துள்ளார்.

சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஜோடி

எஸ்எல்3-எஸ்எல்4 ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் பிரிவில் உலகின் நம்பர் 1 ஜோடியான பிரமோத் பகத் மற்றும் சுகந்த் கடம் நான்கு நாடுகள் பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் தங்கம் வென்றனர்.

காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸூக்கு தங்கம்

காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸ் தங்கம் வென்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம் உல் ஹக் நியமனத்திற்கு கிரிக்கெட் வாரியம் ஒப்புதல்

ஒரு மாதமாக காலியாக இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு, முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டி20 கிரிக்கெட்டில் பும்ரா,அஸ்வினின் சாதனையை முறியடித்தார் ஹர்திக் பாண்டியா

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 6) 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளராக டேனியல் வெட்டோரி நியமனம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத், அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை நியமித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 18 பேர் கொண்ட பூர்வாங்க அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி ஆடவர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2023 இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 18 பேர் கொண்ட பூர்வாங்க அணியை அறிவித்துள்ளது.

ஒருநாள் உலகக்கோப்பை 2023 : கிரிக்கெட் அணியை இந்தியா அனுப்ப பாகிஸ்தான் அரசு ஒப்புதல்

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அக்டோபர்-நவம்பர் 2023இல் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் தங்கள் நாட்டு கிரிக்கெட் அணி பங்கேற்பதை உறுதி செய்தது.