ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்தது வங்கதேச கிரிக்கெட் வாரியம்
வங்கதேச கிரிக்கெட் வாரியம் 2023 ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட அணியை சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) அறிவித்தது. இந்த அணிக்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்குவார். முன்னதாக தமீம் இக்பால் காயம் காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதோடு, ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகினார். இதையடுத்து, அவருக்கு பதிலாக ஷகிப் அல் ஹசன் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடருக்கான வங்கதேச அணியின் கேப்டனாக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஷகிப் அல் ஹசன் ஏற்கனவே வங்கதேச டெஸ்ட் மற்றும் டி20 அணியின் கேப்டனாகவும் உள்ள நிலையில், தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வங்கதேச கேப்டனாக உள்ளார்.
வங்கதேச அணி வீரர்களின் பட்டியல்
மூத்த ஆல்ரவுண்டர் மஹேதி ஹசன் அணிக்கு மீண்டும் திரும்பும் நிலையில், இளம் வீரர்களான தன்சித் தமீம் மற்றும் ஷமிம் ஹொசைனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். எமெர்ஜிங் ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தன்சித், அதில் மூன்று அரைசதங்கள் அடித்தார். இதற்கிடையில், இளம் பேட்டர் ஷமிம், வங்கதேசத்திற்கான டி20 போட்டிகளில் வழக்கமான முகமாக இருந்து வருகிறார். வங்கதேச அணி : ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், தன்சித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தௌஹித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மம்ஹுத், மஹேதி ஹசன், நசும் அஹ்மத், நசும் அஹ்மத், நசும் அஹ்மத், இஸ்லாம், எபடோட் ஹொசைன், முகமது நைம்.