NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
    எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

    எம்எஸ் தோனியின் கோரிக்கையை நிராகரித்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 11, 2023
    06:24 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு அகில இந்திய அளவில் புச்சி பாபு தொடரை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அழைப்பிதழ் கொடுக்கும் அணிகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டி நான்கு நாள் போட்டியாக நடைபெற உள்ளது.

    உள்நாட்டு கிரிக்கெட் தொடர் நடக்காத இந்த சமயத்தில், பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் உள்நாட்டு டி20போட்டிகளை நடத்தி வரும் நிலையில், தமிழ்நாடு ஆறு வருடத்திற்கு முந்தைய தொடரை மீண்டும் அறிமுகப்படுத்துகிறது.

    ரஞ்சிக் கோப்பையில் தமிழகத்தின் மோசமான ஆட்டமும் இந்தப் போட்டிக்கு வருவதற்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.

    இதில் ஜார்க்கண்ட் அணியையும் சேர்க்க எம்எஸ் தோனி கோரிக்கை விடுத்த நிலையில், அதை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    tnca denies ms dhoni request

    ஜார்க்கண்ட் அணியை சேர்க்க எம்எஸ் தோனி கோரிக்கை

    ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடத்தப்படும் இந்த தொடரில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனி, தான் சார்ந்த ஜார்க்கண்ட் அணியையும் சேர்க்க கோரிக்கை வைத்திருந்தார்.

    ஆனால், ஏற்கனவே 12 அணிகள் உறுதி செய்யப்பட்டு விட்டதால், தோனியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டதாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்ஐ பழனி தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் மட்டுமல்லாது சர்வீசஸ் மற்றும் சத்தீஸ்கர் கூட பங்கேற்க விருப்பம் தெரிவித்தாலும் சேர்க்க முடியவில்லை என அவர் மேலும் கூறினார்.

    இதற்கிடையே, புச்சி பாபு தொடரை கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. போட்டி ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 11வரை நடைபெற உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எம்எஸ் தோனி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    எம்எஸ் தோனி

    'பத்த வச்சிட்டையே பரட்டை' : சிஎஸ்கே மீது அதிருப்தியில் இருக்கிறாரா ஜடேஜா? ஐபிஎல்
    அன்னையர் தினத்தில் தோனியின் தாய்க்கு நன்றி சொன்ன சிஎஸ்கே ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்! அன்னையர் தினம் 2023
    இது தான் கடைசி சீசன்? எம்எஸ் தோனியின் செயலால் ரசிகர்கள் சந்தேகம்! ஐபிஎல்
    'தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தால் ஆச்சரியப்படுவேன்' : கெவின் பீட்டர்சன் ஐபிஎல்

    கிரிக்கெட்

    INDvsWI முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு இந்திய கிரிக்கெட் அணி
    INDvsWI முதல் டி20: இந்தியா அதிர்ச்சித் தோல்வி; காரணத்தை விளக்கிய ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணி
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ஃப்ளவர் நியமனம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தமீம் இக்பால் விலகல் வங்கதேச கிரிக்கெட் அணி

    கிரிக்கெட் செய்திகள்

    இந்திய சந்தையில் விற்பனைக்கே வராத இயர்பட்ஸை பயன்படுத்தும் விராட் கோலி; என்ன ஸ்பெஷல் தெரியுமா? விராட் கோலி
    அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தார் மனோஜ் திவாரி இந்திய கிரிக்கெட் அணி
    டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு; 200வது போட்டியில் விளையாடும் இந்திய அணி இந்திய கிரிக்கெட் அணி
    'இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டேன்' : இங்கிலாந்து வீரர் மொயீன் அலி உறுதி இங்கிலாந்து கிரிக்கெட் அணி

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை கிரிவலம்: ஆகஸ்ட் 1ஆம் தேதி சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் திருவண்ணாமலை
    துப்புரவு பெண் தொழிலாளர்கள் வாங்கிய ரூ.250 லாட்டரி சீட்டுக்கு, ரூ.10 கோடி பரிசு!  கேரளா
    சென்னையில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர்  மு.க ஸ்டாலின்
    கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி விபத்து: 4 பேர் பலி, 3 வீடுகள் தரைமட்டம்  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025