ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி
சென்னையில் நடந்து வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 அரையிறுதியில் ஜப்பானை எதிர்கொண்ட இந்திய ஹாக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணிக்காக ஆகாஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத், மன்தீப் சிங், சுமித், செல்வம் கார்த்தி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இந்த போட்டியில் கோவில்பட்டியை சேர்ந்த செல்வம் கார்த்தி விளையாடுவதால், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மைதானத்திற்கு திரளாக வந்து உற்சாகப்படுத்தினர். இதற்கிடையே மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியன் தென்கொரியாவை வீழ்த்தி மலேசியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) இரவு 8.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா மலேசியாவை எதிர்கொள்ள உள்ளது.