"ஹர்திக் பாண்டியா செய்த மிக பெரிய பிழை"- ராபின் உத்தப்பா அதிருப்தி
செய்தி முன்னோட்டம்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வருகிறது இந்திய அணி.
ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது நிலையில், இரண்டிலும் தோல்வியைத் தழுவி மோசமான நிலையில் இருக்கிறது இந்தியா. அடுத்து வரும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்ல முடியும் என்ற நிலையில் இருக்கிறது இந்திய அணி.
கடந்த ஆண்டு தனது கேப்டன்சி திறன் மூலம் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கி வந்தார் தற்போதைய டி20 கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா. ஆனால், தற்போது நடைபெற்று வரும் போட்டிகளில் அவருடைய அணுகுமுறை பல்வேறு தரப்பினரிடையும் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிரிக்கெட்
ராபின் உத்தப்பா அதிருப்தி:
முக்கியமாக இரண்டாவது டி20-யின் இறுதி ஓவர்களில் யுவேந்திர சாஹலை பயன்படுத்தாதது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிகழ்வு குறித்து முன்னாள் இந்திய பேட்டர் ராபின் உத்தப்பாவும், தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, "16-வது ஓவரில் ஹெட்மெயர் மற்றும் ஜேஸன் ஹோல்டர் ஆகிய இருவரையும் சாஹல் வெளியேற்றினார்.
இறுதியாக சாஹலுக்கு 1 ஓவர் மீதமிருந்தது. அவருக்கு மற்றொரு ஓவரைக் கொடுத்து ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக முடித்திருக்கலாம். சாஹலுக்கு லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எப்படி பந்து போட வேண்டும் என நன்றாகவே தெரியும்.
இது ஹர்திக் பாண்டியாவின் செய்த மிகப்பெரிய பிழை" எனத் தெரிவித்திருக்கிறார் அவர்.