இலங்கை பிரீமியர் லீக் : டி20 கிரிக்கெட்டில் 10வது சதத்தை பூர்த்தி செய்த பாபர் அசாம்
இலங்கை பிரீமியர் லீக்கில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம், டி20 கிரிக்கெட்டில் தனது 10வது பதிவு செய்துள்ளார். திங்கட்கிழமை (ஆகஸ்ட் 7) இந்த சீசனின் 10வது போட்டியில் காலி டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த காலி டைட்டன்ஸ் 188 ரன்கள் குவித்தது. 189 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் 59 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் இறுதியில் ஒரு பந்து மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வீரர்கள்
டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் தனது பத்தாவது சதத்தை பதிவு செய்துள்ள நிலையில், அதிக சதமடித்த வீரர்களில் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். முன்னதாக, கிறிஸ் கெயில் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 22 சதங்களுடன் யாரும் எட்டமுடியாத உயரத்தில் பட்டியலின் முதலிடத்தில் உள்ளார். இத்திற்கிடையே, பட்டியலில் பாபர் அசாமுக்கு அடுத்த இடத்தில், தலா 8 சதங்களுடன் விராட் கோலி, டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் மூன்றாவது இடத்தில் உள்ளனர். பாபர் அசாமின் ஒட்டுமொத்த டி20 கேரியரைப் பொறுத்தவரை, பாபர் அசாம் இப்போது 254 இன்னிங்ஸ்களில் 129 ஸ்ட்ரைக் ரேட்டில் 9,412 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 10 சதங்கள் மற்றும் 77 அரைசதங்களும் அடங்கும்.