காமன்வெல்த் விளையாட்டு: செய்தி
காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் ஃபென்சிங் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில், இந்திய வாள்வீச்சு அணி 35 பதக்கங்களை குவித்து முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் நிறைவு: பாகிஸ்தான் வீரா் குத்ரத்துல்லா உட்பட பல வீரா்கள் மாயம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026 நிறைவடைந்த நிலையில், போட்டிகளில் பங்கேற்ற பாகிஸ்தான் பாக்சிங் வீரர் குத்ரத்துல்லா மற்றும் உகாண்டா நாட்டை சேர்ந்த 4 வீரர்கள் உட்பட பல விளையாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் தாயகம் திரும்பாமல் மாயமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2030-ல் இந்தியாவில் காமன்வெல்த்: கிளாஸ்கோவில் இருந்து அகமதாபாத்திற்கு கைமாறிய கொடி
கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகலமான நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்துள்ளன.
ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள்! 5000 மீட்டரில் வெண்கலம் வென்று வரலாற்று சாதனை படைத்த குல்வீர் சிங்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் குல்வீர் சிங் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் அகமதாபாத்! கிளாஸ்கோ நிறைவு விழாவில் கொடி ஒப்படைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடத்துவதற்கான அதிகாரப்பூர்வப் பயணத்தின் முதல் கட்டம் தொடங்குகிறது.
காமன்வெல்த் 2026: ஒரே போட்டியில் 2 பதக்கங்கள் வென்று அசத்திய இந்தியா! தமிழக வீரர்கள் சாதனை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மிக விமரிசையாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் தடகள வீரர்கள் மீண்டும் ஒருமுறை தங்களது திறமையை நிரூபித்துள்ளனர்.
காமன்வெல்த் போட்டியில் டெக்கத்லானில் பதக்கம் வென்ற முதல் இந்தியர்! தேஜஸ்வின் சங்கர் அசத்தல்
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் ஆடவர் டெக்கத்லான் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்றுப் சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026: பளுதூக்குதலில் இந்தியாவின் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்
இந்திய பளுதூக்கும் வீரர் லவ்பிரீத் சிங் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
4 வயதில் கையை இழந்தவர், காமன்வெல்த்தில் 100 மீட்டர் பாரா ஓட்டத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG 2026), ஆண்களுக்கான 100 மீட்டர் T47 பாரா தடகள பிரிவில் இந்திய வீரன் திலீப் காவித் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் 2026: வறுமை, கொடுமைகளை வென்று தங்கம் வென்ற பாரா வீராங்கனை ஷர்மிளா தங்கர்
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வறுமை, உடல் குறைபாடு மற்றும் குடும்ப வன்முறை எனப் பல சோதனைகளைச் சந்தித்த ஹரியானாவை சேர்ந்த 40 வயதான ஷர்மிளா தங்கர், கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் தங்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு 2026: தங்கம், வெள்ளிகளுடன் 6 பதக்கங்களைக் குவித்து சாதனை படைத்த இந்தியா
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரின் 5-வது நாளில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஒரே இரவில் 6 பதக்கங்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
கிளாஸ்கோ காமன்வெல்த்: பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த ராஜா முத்துப்பாண்டி
கிளாஸ்கோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான வீரர் ராஜா முத்துப்பாண்டி பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சர்வதேச அரங்கில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அதே கிளாஸ்கோ நகரம்! 12 ஆண்டுகளுக்குப் பின் சாதனை வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய மீராபாய் சானு
கிளாஸ்கோ நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு புதிய சாதனை படைத்துள்ளார்.
காமன்வெல்த் 2026 பளுதூக்குதலில் வெள்ளி வென்றார் ரிஷிகாந்த சிங்: 121 கிலோ தூக்கி புதிய சாதனை!
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2026-ன் ஆண்களுக்கான 60 கிலோ எடையுள்ள பளுதூக்கும் பிரிவில் இந்தியாவின் சனம்பம் ரிஷிகந்தா சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். மலேசியாவின் முகமது அனிக் பின் கஸ்தான் தங்கம் வென்றார்.
இ-ரிக்ஷா ஓட்டியவர்... இன்று இந்தியாவின் நாயகன்! காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கம் வென்ற ஜாண்டு குமார்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்தியா தனது முதல் பதக்கத்துடன் பதக்கக் கணக்கைத் தொடங்கியுள்ளது.
கிளாஸ்கோ காமன்வெல்த் 2026: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை விபரம்!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஜூலை 23 அன்று பிரம்மாண்டமாகத் தொடங்குகின்றன.
காமன்வெல்த் விளையாட்டு 2026: கிரிக்கெட் நீக்கப்படக் காரணம் என்ன?
கடந்த 2022 ஆம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுத் தொடரில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் இறுதிப் போட்டியில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
5 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்ஸ்களை கொண்டிருந்தால் நீங்கள் 'செலிபிரிட்டி': SEBI-யின் புது வரையறை
இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), ' பிரபலம்'(celebrity) என்ற சொல்லுக்கு புதிய வரையறை அளிக்கக்கூடிய ஒரு புதிய விளம்பர குறியீட்டை முன்மொழிந்துள்ளது.
இந்திய பேட்மிண்டன் ராணி சாய்னா நேவால் ஓய்வு! கண்ணீருடன் விடைபெறும் ஒலிம்பிக் பதக்க நாயகி
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சர்வதேச மற்றும் போட்டி பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு வழங்கப்பட்டது
2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமை அகமதாபாத்திற்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
2036 ஒலிம்பிக்கிற்கு முன்னோட்டமாக 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; தீவிரமாக தயாராகும் மத்திய அரசு
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை (CWG) நடத்த அகமதாபாத்தைப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் கவனம் உடனடியாக 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அதன் லட்சிய இலக்கை நோக்கித் திரும்பியுள்ளது.
அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்; மத்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உறுதி செய்தார்
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவில் உள்ள அகமதாபாத் நகரத்தில் நடத்துவது உறுதியாகி உள்ளது.
காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று மீராபாய் சனு புதிய சாதனை
இந்தியப் பளுதூக்குதல் நட்சத்திரமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று மீண்டும் சர்வதேச களத்திற்குத் திரும்பியுள்ளார்.
2030 காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல்
ஆகஸ்ட் 13 புதன்கிழமை நடைபெற்ற சிறப்புப் பொதுக் கூட்டத்தின் போது, 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏலத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் முறையாக அங்கீகரித்தது.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த இந்தியா விண்ணப்பம் சமர்ப்பிப்பு
குஜராத்தின் அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா அதிகாரப்பூர்வமாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
விளையாட்டு வீரர்களிடையே ஊக்கமருந்து, வயது மோசடி ஆகியவற்றை மத்திய அரசு எவ்வாறு தடுக்க போகிறது?
ஒரு பெரிய கொள்கை மாற்றமாக, சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் ஜூனியர் விளையாட்டு வீரர்களுக்கு ரொக்கப் பரிசுகளை வழங்குவதை இந்திய விளையாட்டு அமைச்சகம் நிறுத்தியுள்ளது.
2026 கிளாஸ்கோ CWG இலிருந்து நீக்கப்பட்ட பிரதான விளையாட்டுக்கள்: என்ன காரணம்?
லண்டன், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வாய்ப்புகளுக்கு ஒரு பெரும் அடியாக, ஹாக்கி, பாட்மிண்டன், மல்யுத்தம், கிரிக்கெட் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற முக்கிய விளையாட்டுகள் 2026 ஆம் ஆண்டு பதிப்பில் இருந்து கிளாஸ்கோவால் கைவிடப்பட்டது.
கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்
ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிட்டிருந்த 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்" - முன்னாள் தலைவரின் உதவியாளர் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரான பிறகு சாக்ஷி மாலிக் அறிவிப்பு
முன்னாள் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உதவியாளர் சஞ்சய் சிங், அக்கூட்டமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கபட்ட சிறிது நேரத்தில், மல்யுத்தத்தை விட்டு விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார்.
காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸூக்கு தங்கம்
காமன்வெல்த் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஹிமான்ஸி டோகாஸ் தங்கம் வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்துகிறோமா? குஜராத் அரசு விளக்கம்
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு அதிகாரிகள் புதன்கிழமை (ஜூலை 19) தெளிவுபடுத்தினர்.
அகமதாபாத்தில் 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்த குஜராத் அரசு விருப்பம்
2026 ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை, பட்ஜெட் பிரச்சினைகளைக் காரணம் காட்டி போட்டியை நடத்தும் முடிவிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம் செவ்வாயன்று (ஜூலை 18) அறிவித்தது.