ஒருநாள் உலகக்கோப்பை 2023 : 18 பேர் கொண்ட பூர்வாங்க அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிசி ஆடவர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பை 2023 இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 18 பேர் கொண்ட பூர்வாங்க அணியை அறிவித்துள்ளது.
இந்த பட்டியல் திங்களன்று (ஆகஸ்ட் 7) ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய இளம் திறமையாளர்கள் கொண்ட அணியாக உருவாக்கப்பட்டுள்ளது.
பேட்டிங் பிரிவில், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் போன்றவர்கள் இருப்பதால், அழுத்தமான சூழ்நிலையிலும் சரியாக செயல்பட முடியும் என ஆஸ்திரேலிய அணி நம்புகிறது.
எனினும் மார்னஸ் லபுசாஞ்சே அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
australia 18 member squad
அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் பட்டியல்
பேட்டிங்கை பந்துவீச்சில் எதிரணியை மிரட்ட பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகிய மூவரின் வலிமையான வேகப்பந்துவீச்சு கூட்டணி உள்ளது.
சுழல் பந்துவீச்சில் ஆடம் ஜம்பா மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே ஒயிட் பால் கிரிக்கெட்டில் தங்கள் செயல்திறனை நிரூபித்துள்ளனர்.
2023 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி: பாட் கம்மின்ஸ் , சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க் , டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.