
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்கு சில மணி நேரங்கள் முடக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆர்சிபி அணியின் எக்ஸ் கணக்கு சனிக்கிழமை (ஆகஸ்ட்12) காணாமல் போனது ரசிகர்களிடயே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், பலரும் இது குறித்து எக்ஸ் தளத்தில் முறையிட்டனர்.
இதையடுத்து கணக்கு சில மணிநேரங்களில் மீட்கப்பட்ட நிலையில் 38 பின்தொடர்பவர்கள் மட்டுமே இருந்ததால் மீண்டும் ரசிகர்கள் முறையிட ஆரம்பித்தனர்.
அதன் பின்னர் இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு, ஆர்சிபியின் கணக்கில் முன்னர் இருந்த 6.8 மில்லியன் பின்தொடர்பவர்களையும் காட்டியது.
எனினும், கணக்கு முடங்கியதன் காரணம் எதுவும் வெளியிடப்படவில்லை.
கணக்கு மீட்கப்பட்டவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்தியாவின் 4வது டி20 குறித்து பதிவிட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
ஆர்சிபி எக்ஸ் கணக்கு முடக்கம்
🚨
— Aryan 45 🇮🇳 (@Iconic_Rohit) August 12, 2023
According to reports,RCB's twitter account got suspended due to impersonating!
They were pretending to be Cricket franchise for the last 15 years pic.twitter.com/HzQNCBEWoG