விளையாட்டு செய்தி

கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் - வீரர்கள், அவர்களின் சாதனைகள் மற்றும் ஒவ்வொரு விளையாட்டுக்கான காலெண்டரைப் பற்றியும் படிக்கவும்.

ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள ஆசிய கோப்பை 2023க்கான 17 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

ஆசிய கோப்பைக்கான அணியில் திடீர் மாற்றம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

2023 ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த தயப் தாஹிர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சவுத் ஷகீல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான செஸ் பயிற்சி முகாமில் பங்கேற்கும் பிரக்ஞானந்தா

சமீபத்தில் நடந்து முடிந்த செஸ் உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா மற்றும் அதில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறிய மூன்று வீரர்களை உள்ளடக்கிய செஸ் அணி ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளது.

உலக சாம்பியன்ஷிப் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

ஹங்கேரியில் நடைபெற்று வரும் தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.

BWF உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் வெண்கலம் வென்றார் பிரணாய் எச்.எஸ். 

2023 BWF உலக சாம்பியன்ஷிப் ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ். வெண்கலம் வென்றார்.

ஒருநாள் உலகக்கோப்பை பிட்ச் இப்படித்தான் இருக்கணும்; கண்டிஷன் போட்ட ஐசிசி

ஒருநாள் உலகக்கோப்பை 2023க்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், ரன் குவிப்பதை ஊக்குவிப்பதற்காக பேட்டிங்கிற்கு ஏற்ற டிராக்குகளை உருவாக்க பிசிசிஐயிடம் ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது.

டென்னிஸில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த 24 வயது இளம் வீரர் மைக்கேல் யெமர் 

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரும், உலகின் முன்னாள் 50ம் நிலை வீரருமான மைக்கேல் யெமர் திடீரென தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் சஸ்பெண்ட்

பிபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு ஸ்பெயின் வீராங்கனை ஜென்னி ஹெர்மோசோவை அவரது அனுமதி இல்லாமல் பொதுமேடையில் ஸ்பெயின் கால்பந்து சம்மேளன தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸ் முத்தமிட்டது சர்ச்சையானது.

தான்சானியா கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது இந்தியா

தான்சனியா கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்முறையாக, இரண்டு இந்திய பயிற்சியாளர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) அந்நாட்டிற்கு சென்றுள்ளனர்.

'யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் இருக்க தகுதியற்றவர்' : முன்னாள் பாக். வீரர் கருத்து

ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 21 அன்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் 18 பேர் கொண்ட அணியை வெளியிட்டனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜோஷ் டங்கு விலகல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கு காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி

ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் ஆதிக்கம் செலுத்திய காலம் முதல், கிரிக்கெட் வரை எப்போதும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்களிடையே அதிக ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.

26 Aug 2023

பிசிசிஐ

ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வீரர்களை அனுப்பும் இந்தியா

சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 634 விளையாட்டு வீரர்களை இந்தியா அனுப்ப உள்ளது.

அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. கேப்டன் நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) புதிய சீசனுக்கு முன்னதாக அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராக சேர்ந்துள்ளார்.

யுஎஸ் ஓபனில் 66 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் கார்லோஸ் அல்கராஸ்

இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் தொடருக்கு நட்சத்திர டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் தயாராகி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உள்நாட்டில் நடைபெறும் சர்வதேச போட்டிகளுக்கு புதிய டைட்டில் ஸ்பான்சரை ஒப்பந்தம் செய்துள்ளது.

நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி

வெள்ளியன்று (ஆகஸ்ட் 25) நடந்த தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இன் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய வீரர்கள் மூன்று பேர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

கிரிக்கெட்டில் இந்த கேள்விக்கு பதிலளித்தால் ரூ.25 லட்சம் பரிசு

இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு இடம்; சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்பிக்கை

ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் போட்டிக்கு இன்னும் 9 நாட்களுக்குள் எஞ்சியுள்ளது. இந்த போட்டி இலங்கையின் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி

இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) 2023 தடகள உலக சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ராஜேஸ்வரி தகுதி

அஜர்பைஜானின் பாகுவில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 25)நடைபெற்ற ஐஎஸ்எஸ்எப் துப்பாக்கிச் சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் மகளிர் ட்ராப் போட்டியில் இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி குமாரி ஐந்தாவது இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராமில் யோ-யோ ஸ்கோரை வெளியிட்டதால் விராட் கோலி மீது பிசிசிஐ அதிருப்தி

வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) விராட் கோலி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், தனது யோ-யோ பிட்னஸ் டெஸ்ட் ஸ்கோரை வெளிப்படுத்தியிருப்பது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) உயர்மட்ட அதிகாரிகளை எரிச்சலடைய செய்துள்ளது.

உலக சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தோல்வி

வியாழன் (ஆகஸ்ட் 24) அன்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் நீளம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தோல்வியைத் தழுவினார்.

36 வயதில் முன்னாள் WWE சாம்பியன் பிரே வியாட் மாரடைப்பால் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி

முன்னாள் WWE சாம்பியனான தொழில்முறை மல்யுத்த வீரர் பிரே வியாட் தனது 36 வயதில் மாரடைப்பால் காலமானார்.

டி20 லீக்கில் புதிய அணிகள் அறிமுகத்தை தள்ளிவைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) உள்ள அணிகளின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டு வரை அதிகரிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளது.

இறுதிப்போட்டியில் தோற்றாலும் சாதனை நாயகனாக வலம் வரும் பிரக்ஞானந்தா

செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார்.

டென்னிஸ் வரலாற்றில் அதிகமுறை சர்வீஸ் செய்த வீரர் யுஎஸ் ஓபனுடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் தொடருக்கு பிறகு, டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் இஸ்னர் அறிவித்துள்ளார்.

கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; இந்தியாவுக்கு விளையாட வரும் நெய்மர்

ஆசிய கிளப் போட்டிகளுக்கு இடையே நடக்கும் AFC சாம்பியன்ஸ் லீக் 2023/24 இன் குழுநிலையில் மும்பை சிட்டி எஃப்சி கால்பந்து கிளப் அணியும், சவூதி அரேபியாவின் அல் ஹிலால் அணியும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளது.

ஆசிய கோப்பையில் கேஎல் ராகுலின் தேர்வு முறையல்ல; 'சீக்கா' கடும் விமர்சனம்

ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ அறிவித்தது.

செஸ் உலகக் கோப்பை 2023 : இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி

செஸ் உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார்.

ஃபிட்னஸில் எப்போதும் கில்லி! பிசிசிஐயின் கடினமான சோதனையில் வெற்றி பெற்ற விராட் கோலி

தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்துக் கொள்வதற்காக எப்போதும் அறியப்படும் விராட் கோலி, தற்போது மிகவும் கடினமான யோ-யோ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் உலக சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை

புடாபெஸ்டில் நடந்த 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி ஐந்தாவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தற்காலிக தடை விதித்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு

உலக மல்யுத்த கூட்டமைப்பு (UWW) இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) உரிய நேரத்தில் தேர்தலை நடத்தாததால் கூட்டமைப்பிலிருந்து நீக்கியுள்ளது.

பிரக்ஞானந்தாவின் வெற்றியை தீர்மானிக்கும் டை-பிரேக்கர் போட்டியின் விதிகள்

செஸ் உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியின் இரண்டு சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட்24) நடக்கும் டை-பிரேக்கர் சுற்றில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட உள்ளார்.

சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி

புதன்கிழமை (ஆகஸ்ட் 23) இந்தியா சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, நிலவின் தென்துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்தது.

IND vs IRE 3வது டி20 போட்டி மழையால் ரத்து; 2-0 என தொடரை வென்றது இந்தியா

இடைவிடாத மழை காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 24) நடக்க திட்டமிட்டிருந்த அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான இந்தியாவின் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதியை அறிவித்தது பிசிசிஐ

2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான டிக்கெட் பார்ட்னராக BookMyShow செயல்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) புதன்கிழமை (ஆகஸ்ட் 23) அறிவித்துள்ளது.

சந்திரனில் சரித்திரம் படைத்த இந்தியா; அயர்லாந்தில் இந்திய கிரிக்கெட் அணி கொண்டாட்டம்

புதன்கிழமை (ஆகஸ்ட் 23) சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவதைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாட்டத்தில் உள்ளது.

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீரர்

நீளம் தாண்டுதலில் தேசிய சாதனையை தக்கவைத்துள்ள தடகள வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் தடகள உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்றார்.