
செஸ் உலகக் கோப்பை 2023 : இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி
செய்தி முன்னோட்டம்
செஸ் உலகக் கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியின் டை-பிரேக்கர் சுற்றில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார்.
முதல் இரண்டு சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட்24) டை-பிரேக்கர் சுற்று நடந்தது.
இதில் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்துப் போட்டியிட்ட 18 வயதான இளம் வீரர் பிரக்ஞானந்தா முதல் ஆட்டத்தில் தோற்ற நிலையில், இரண்டாவது ஆட்டத்திலும் தோல்வியை நோக்கிச் சென்றதால், பாதியிலேயே விலகினார்.
இதையடுத்து மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தாலும், இதுதான் அவருக்கு முதல் உலகக் கோப்பை பட்டமாகும்.
இதற்கிடையே, 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டி வரை முன்னேறியும், உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பிரக்ஞானந்தா அதிர்ச்சித் தோல்வி
Just IN: Praggnanandhaa LOST #ChessWorldCup final.
— Manobala Vijayabalan (@ManobalaV) August 24, 2023
Would have been the first Indian🇮🇳 to win after 21 years.
||#Praggnanandhaa | #MagnusCarlsen|| pic.twitter.com/juPbu65VNo