
யுஎஸ் ஓபனில் 66 ஆண்டு கால சாதனையை முறியடிக்கும் கார்லோஸ் அல்கராஸ்
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் தொடருக்கு நட்சத்திர டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸ் தயாராகி வருகிறார்.
முன்னதாக, மாண்ட்ரீலில் நடந்த போட்டியில் ஆரம்பத்திலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தாலும், அதிலிருந்து மீண்டு வந்த அல்கராஸ், கடந்த வாரம் சின்சினாட்டி ஓபனில் இறுதிப் போட்டியை எட்டினார்.
இதன் மூலம், உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை கார்லோஸ் அல்கராஸ் தக்கவைத்தாலும், நோவக் ஜோகோவிச் மூலம் முதலிடத்திற்கு தொடர்ந்து ஆபத்து நிலவி வருகிறது.
இதற்கிடையே, யுஎஸ்டிஏ நேஷனல் பில்லி ஜீன் கிங் டென்னிஸ் மையத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 28) தொடங்கும் யுஎஸ் ஓபனில் கார்லோஸ் அல்கராஸ் தனது பயணத்தைத் தொடங்கும் போது, புதிய சாதனை படைக்க உள்ளார்.
carlos alcaraz break 66 years of record
உலக தரவரிசையில் முதலிடத்துடன் யுஎஸ் ஓபனில் பங்கேற்கும் அல்கராஸ்
திங்கட்கிழமை யுஎஸ் ஓபன் தொடங்கும்போது உலக தரவரிசையில் 20 வருடம் 115 நாட்கள் வயதுடன் போட்டியில் களமிறங்குகிறார்.
இதன் மூலம் மிக இளம் வயதில் தரவரிசையில் முதலிடத்துடன் யுஎஸ் ஓபனில் களமிறங்கும் வீரர் என்ற சாதனையை கார்லோஸ் அல்கராஸ் பெற உள்ளார்.
இதற்கு முன்னர், 1957 யுஎஸ் ஓபனில் 20 வயது 349 நாட்களில் நம்பர் 1 தரவரிசையில் இருந்த ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் ஆஷ்லே கூப்பர் இந்த சாதனையை செய்திருந்தார்.
அதன்பிறகு, 66 ஆண்டுகள் கழித்து தற்போது அந்த சாதனையை கார்லோஸ் அல்கராஸ் முறியடிக்க உள்ளார்.
இதற்கிடையே, யுஎஸ் ஓபனில் நடப்பு சாம்பியனாகவும் அல்கராஸ் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.