Page Loader
உலக சாம்பியன்ஷிப் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி
உலக சாம்பியன்ஷிப் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

உலக சாம்பியன்ஷிப் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 27, 2023
11:42 am

செய்தி முன்னோட்டம்

ஹங்கேரியில் நடைபெற்று வரும் தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் ஆசிய சாதனையை இந்தியா முறியடித்துள்ளது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) நடந்த தகுதிச்சுற்றில் முகமது அனஸ் யாஹியா, அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல் வாரியத்தோடி மற்றும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் 2:59.05 நிமிடத்தில் இலக்கை எட்டி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தனர். இதன்மூலம், முந்தைய ஆசிய சாதனையான 2:59.51ஐ முறியடித்ததோடு, முதல்முறையாக 4x400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி இதுவரை 2 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ள நிலையில், இந்த முறை பல வீரர்களும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், கூடுதல் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி