பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுலுக்கு இடம்; சஞ்சய் மஞ்ச்ரேகர் நம்பிக்கை
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை 2023 தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இந்தியா மோதும் போட்டிக்கு இன்னும் 9 நாட்களுக்குள் எஞ்சியுள்ளது. இந்த போட்டி இலங்கையின் பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் இதில் பங்கேற்கும் இந்திய அணியின் விளையாடும் லெவனை கணித்துள்ளார்.
காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாத நிலையிலும், ஆசிய கோப்பை அணியில் கேஎல் ராகுல் இடம்பிடித்துள்ளார்.
எனினும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
இருப்பினும், விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் அணியில் இடம் பெற்றுள்ளதால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரது பெயரும் இடம்பெறும் என மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார்.
sanjay manjrekar predicted india playing 11
எதிர்பார்க்கப்படும் இந்திய விளையாடும் லெவன் அணி
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், "ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோருடன் ஹர்திக் பாண்டியா நான்காவது வேகப்பந்துவீச்சாளராக இருப்பார்.
சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் களமிறங்குவர்." என்றார்.
அதே நேரத்தில் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ரோஹித் ஷர்மாவும், நம்பர் 3 இடத்தில் விராட் கோலியும் களமிறங்குவர் எனத் தெரிவித்தார்.
மஞ்ச்ரேக்கரின் இந்திய லெவன் அணி : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர்/ திலக் வர்மா, கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்.