கிரிக்கெட்டில் இந்த கேள்விக்கு பதிலளித்தால் ரூ.25 லட்சம் பரிசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் மட்டுமல்லாது உள்நாட்டில் நடைபெறும் இந்திய அணியின் ஒவ்வொரு சர்வதேச போட்டிகளிலும் ரசிகர்கள் முழுமையாக மைதானங்களை ஆட்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கவுன் பனேகா குரோர்பதி (கேபிசி) வினாடி வினா நிகழ்ச்சியில் ரூ.25 லட்சம் பரிசுக்கு கிரிக்கெட் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில், சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் இரட்டையர்களை அவுட்டாக்கிய முதல் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
கேள்விக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ரவிச்சந்திரன், இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோரது பெயர்கள் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கேள்விக்கு போட்டியாளர் எளிதாக பதிலளித்தார்.
ashwin first indian player achieves this feet
தந்தை - மகனை முதன் முதலாக வீழ்த்திய இந்திய கிரிக்கெட்டர்
சமீபத்தில், இந்திய ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் இரட்டையர்களை வெளியேற்றிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார்.
இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் தேஜ்நரைன் சந்தர்பாலை அவுட்டாக்கினார்.
அஸ்வின் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னதாக, அவரது தந்தை ஷிவ்நரைன் சந்தர்பாலின் விக்கெட்டையும் பெற்றிருந்தார்.
2011இல் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது அஸ்வின் ஷிவ்நரைன் விக்கெட்டை கைப்பற்றிருந்தார்.
உலக அளவில் இயன் போத்தம், வாசிம் அக்ரம், சைமன் ஹார்மர் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்குப் பிறகு இந்த சாதனையை செய்த ஐந்தாவது வீரர் என்ற சாதனையை படைத்த அஸ்வின், இந்திய அளவில் முதல் வீரர் ஆனார்.