3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் உலக சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை
புடாபெஸ்டில் நடந்த 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி ஐந்தாவது இடத்தைப் பிடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன் மூலம், தடகள உலக சாம்பியன்ஷிப்பில் டிராக் நிகழ்வின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற இரண்டாவது இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை பருல் சவுத்ரி புதன்கிழமை பெற்றார். 28 வயதான பருல் சவுத்ரி, இதில் 9 நிமிடங்கள் 24.29 வினாடிகளில் இலக்கை எட்டி ஐந்தாவது இடத்தை பிடித்ததன் மூலம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 27) நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சவுத்ரிக்கு முன், லலிதா பாபர் மட்டுமே 3,000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் உலக சாம்பியன்ஷிப்பில் டிராக் நிகழ்வின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே இந்தியப் பெண்மணி ஆவார்.