
டென்னிஸ் வரலாற்றில் அதிகமுறை சர்வீஸ் செய்த வீரர் யுஎஸ் ஓபனுடன் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் தொடருக்கு பிறகு, டென்னிஸில் இருந்து ஓய்வு பெறுவதாக அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் இஸ்னர் அறிவித்துள்ளார்.
2023 யுஎஸ் ஓபன் அவரது கடைசி மேஜராக இருப்பதோடு, தொடர்ந்து 17வது யுஎஸ் ஓபனாகவும் இருக்கும்.
ஓய்வு குறித்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையிலும் ஒரு குறிப்பிட்ட நேரம் வரும்.
அப்போது நாம் விலகிவிட வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அந்த நேரம் இப்போது வந்துள்ளது." என்று தெரிவித்தார்.
மேலும், 2007 இல் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பிறகு, ஏடிபி சுற்றுப்பயணத்தில் 17 ஆண்டுகள் விளையாடியுள்ளதை நான் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை." எனக் கூறினார்.
John Isner set to retire after us open
ஜான் இஸ்னரின் டென்னிஸ் புள்ளி விபரங்கள்
34 வயதான ஜான் இஸ்னர், டென்னிஸ் வரலாற்றில் அதிக முறை சர்வ் செய்த வீரர் என்ற சாதனை படைத்தவராக உள்ளார்.
இதுவரை 14,411 முறை அதிகாரப்பூர்வமாக சர்வ் செய்துள்ள ஜான் இஸ்னர், 14,000க்கும் மேல் சர்வீஸ் ஷாட் அடித்த ஒரே டென்னிஸ் வீரர் இவர் மற்றும் 10,000க்கும் மேல் அடித்த ஐந்து வீரர்களில் ஒருவராக உள்ளார்.
2010 விம்பிள்டன் முதல் சுற்றில் நிக்கோலஸ் மஹுத்துக்கு எதிராக 113 சர்வ்களை பதிவு செய்து, ஒரே போட்டியில் அதிக சர்வீஸ் செய்த சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அவர் விம்பிள்டன் 2010 முதல் சுற்றில் 11 மணி நேரம் 5 நிமிடங்கள் போராடி மஹுத்தை வீழ்த்தினார். டென்னிஸ் வரலாற்றில் மிக நீண்ட ஆட்டம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.