Page Loader
தான்சானியா கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது இந்தியா
தான்சானியா கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது இந்தியா

தான்சானியா கபடி வீரர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சியாளர்களை அனுப்பி வைத்தது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 26, 2023
06:18 pm

செய்தி முன்னோட்டம்

தான்சனியா கபடி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்முறையாக, இரண்டு இந்திய பயிற்சியாளர்கள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் இரு நாடுகளிடையே உறவை அதிகரிக்கும் வகையில், இந்திய அரசின் நிதியுதவியுடன் தான்சானியா கபடி வீரர்களுக்கு இந்தியா பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிம்ரத் கெய்க்வாட் மற்றும் சௌந்தரராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சிம்ரத் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மும்பை பிரிவிலும், சௌந்தரராஜன் பெங்களூர் பிரிவிலும் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில், தற்போது இருவரும் தான்சனியா சென்றுள்ளனர். இருவரும் தான்சானியாவில் தங்கியிருந்து அடுத்த ஒரு வருடத்திற்கு அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

தான்சானியா கபடி வீரர்களுக்கு இந்தியா பயிற்சி