NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்
    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்

    ஆசிய கோப்பை போட்டியைக் காண பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ தலைவர்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 26, 2023
    11:35 am

    செய்தி முன்னோட்டம்

    பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்கு செல்ல உள்ளனர்.

    ஆசிய கோப்பைக்கான பாகிஸ்தான் செல்லும் பிசிசிஐ குழு, செப்டம்பர் 4 முதல் 7 வரை லாகூரில் தங்கி ஆசிய கோப்பை போட்டிகளை பார்க்க உள்ளனர்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயின் அனைத்து முதன்மைப் பொறுப்பாளர்களுக்கும் தங்கள் நாட்டுக்கு வர அழைப்பு விடுத்திருந்தாலும், பிசிசிஐ தனது தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு மட்டுமே பாகிஸ்தான் செல்ல அனுமதி கொடுத்துள்ளது.

    மிகவும் எதிர்பார்க்கப்படும் ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 30 அன்று பாகிஸ்தானின் முல்தானில் பாகிஸ்தான் மற்றும் நேபாள கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    bcci team also visit srilanka

    இலங்கைக்கும் பயணம் செய்யும் பிசிசிஐ குழு

    பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா, செயலாளர் ஜெய் ஷா ஆகியோர் அடங்கிய குழு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையில் நடக்கும் போட்டியை காண அங்கு செல்கிறார்கள்.

    அங்கிருந்து மூவரும் செப்டம்பர் 3ஆம் தேதி இந்தியா திரும்பும் நிலையில், தலைவர் மற்றும் துணைத் தலைவர் வாகா எல்லை வழியாக தரை மார்க்கத்தில் லாகூர் செல்கிறார்கள்.

    செப்டம்பர் 4ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விருந்தில் இருவரும் கலந்துகொள்கின்றனர்.

    அதன் பின்னர் செப்டம்பர் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான ஆட்டத்தையும், அடுத்த நாள் சூப்பர் ஃபோர் சுற்றின் தொடக்க ஆட்டத்தையும் நேரில் கண்டுகளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிசிசிஐ
    ஆசிய கோப்பை
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா
    வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது நடிகர் சூர்யா
    2024-25 நிதியாண்டிற்கான ஐடிஆர் தாக்கல்: முக்கிய காலக்கெடு மற்றும் விபரங்கள்; வரி செலுத்துபவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியவை வருமான வரி அறிவிப்பு

    பிசிசிஐ

    எமெர்ஜிங் மகளிர் ஆசிய கோப்பை 2023க்கான இந்திய அணி அறிவிப்பு! மகளிர் கிரிக்கெட்
    ஆப்கான் கிரிக்கெட் தொடர் செப்டெம்பருக்கு ஒத்திவைக்க பிசிசிஐ திட்டம்! ஆப்கான் கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதமாகும் என தகவல் ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணியின் வரைவு போட்டி அட்டவணை கசிவு ஒருநாள் கிரிக்கெட்

    ஆசிய கோப்பை

    ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு! இந்திய அணி
    ஆசிய கிரிக்கெட் கோப்பை 2023 : பாகிஸ்தானின் ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொள்ள பிசிசிஐ மறுப்பு! கிரிக்கெட்
    ஆசிய கோப்பையை நடத்த இலங்கை கிரிக்கெட் வாரியம் தயார் என தகவல்! இலங்கை கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கியில் பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா! ஹாக்கி போட்டி

    கிரிக்கெட்

    இந்தியாவின் டி20 தோல்வி குறித்து தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்ட அஸ்வின் ரவிச்சந்திரன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பை அணியில் இடம்; வைரலாகும் பென் ஸ்டோக்ஸின் மூன்றெழுத்து ரியாக்சன் ஒருநாள் உலகக்கோப்பை
    'பும்ராவுக்கு ஏற்பட்ட நிலைதான் கேஎல் ராகுலுக்கும் ஏற்படும்' : ரவி சாஸ்திரி எச்சரிக்கை இந்திய கிரிக்கெட் அணி
    விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் உலகக்கோப்பை இந்தியா வசம் : பாக். முன்னாள் கேப்டன் விராட் கோலி

    கிரிக்கெட் செய்திகள்

    இதே நாளில் அன்று : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற தினம் எம்எஸ் தோனி
    இலங்கை இளம் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இலங்கை கிரிக்கெட் அணி
    10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து கிரிக்கெட் அணி
    ஒருநாள் உலகக்கோப்பையில் பரிசீலிக்கப்படாதது குறித்து மனம் திறந்த அஸ்வின் ரவிச்சந்திரன் அஸ்வின் ரவிச்சந்திரன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025