Loading...
சவூதி அரேபியாவின் முதல் சொந்த கார் பிராண்ட் 'சீர்': Exobot மின்சார கார்கள் அறிமுகம்
சவூதி அரேபியாவின் முதல் சொந்த கார் பிராண்ட் 'ceer'

சவூதி அரேபியாவின் முதல் சொந்த கார் பிராண்ட் 'சீர்': Exobot மின்சார கார்கள் அறிமுகம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
04:36 pm

செய்தி முன்னோட்டம்

சவூதி அரேபியா தனது சொந்த தயாரிப்பிலான முதல் வாகன பிராண்டான சீர் (Ceer) மூலம் சர்வதேச வாகன சந்தையில் அதிகாரப்பூர்வமாக காலடி எடுத்து வைத்துள்ளது. Exobot எனும் எதிர்கால வடிவிலான செடான் மற்றும் எஸ்.யு.வி ஆகிய இரு மின்சார கார் மாடல்களை அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. எக்சோபாட் கார்கள் 3 மின்சார மோட்டார்கள் கொண்ட ஆல்-வீல் டிரைவ் தொழில்நுடபத்துடன் இயங்குகின்றன. இவை 850 குதிரைத்திறன் (hp) வரை ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் உயர்தர மாடல் 1,111 hp ஆற்றலையும், 1,500 Nm டார்க் விசையையும் வழங்கி அசத்துகிறது. செடான் மாடல் வெறும் 2.1 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டிப்பிடிக்கும்.

செயல்திறன்

பேட்டரி மற்றும் மைலேஜ்

800-வோல்ட் தொழில்நுட்பத்தில் இயங்கும் 112kWh NCM பேட்டரியை கொண்டுள்ள இந்த கார்கள், அரை மணி நேரத்திற்குள் 10% இலிருந்து 80% வரை சார்ஜ் ஆகும் திறன் பெற்றவை.

செடான் மாடல் ஒரு முழுமையான சார்ஜில் 670கி.மீ வரையிலும், SUV மாடல் 560 கி.மீ வரையிலும் மைலேஜ் வழங்கும்.

சவூதி அரேபியாவின் பழங்கால ஹேக்ரா கட்டிடக்கலையை மையமாக கொண்டு இக்காரின் உடற்பகுதி செதுக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபிய நாட்டின் ஒருங்கிணைப்பு ஆண்டான 1932-ஐ நினைவூட்டும் வகையில் 32 முகப்பு லைட்டிங் வழங்கப்பட்டுள்ளன.

காரில் 2.4 மீட்டர் நீளமுள்ள விண்ட்ஷீல்டு, 60 செ.மீ கோணத்தில் மேல்நோக்கி திறக்கும் Shahin Wing கதவுகள் இடம்பெற்றுள்ளன.

கதவுகளில் உள்ள கண்ணாடிகளை ஒரே பொத்தானை அழுத்துவதன் மூலம் Transparent-ஆகவோ,Opaque-ஆகவோ மாற்றிக்கொள்ள முடியும்.

எதிர்காலத் திட்டம்

பிராண்டின் வரலாறு மற்றும் எதிர்காலத் திட்டம்

2022-ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம் (PIF) மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் 'சீர்' உருவாக்கப்பட்டது.

பி.எம்.டபிள்யூ, ஹூண்டாய் போன்ற முன்னணி சர்வதேச நிறுவனங்களின் தொழில்நுட்பப் பங்களிப்போடு உருவாக்கப்பட்டுள்ள சீர், 2030-ஆம் ஆண்டிற்குள் 7 புதிய கார் மாடல்களை சந்தைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT