Loading...
எலான் மஸ்க் அறிமுகம் செய்த 'எக்ஸ் நம்பர்ஸ்': X தளத்தில் இனி நேரடியாக பேசலாம்
'X Numbers' என்ற புதிய மற்றும் வினோதமான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

எலான் மஸ்க் அறிமுகம் செய்த 'எக்ஸ் நம்பர்ஸ்': X தளத்தில் இனி நேரடியாக பேசலாம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 23, 2026
03:40 pm

செய்தி முன்னோட்டம்

எலான் மஸ்கிற்கு சொந்தமான 'எக்ஸ் சாட்' (XChat) தளத்தில், பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் 'X Numbers' என்ற புதிய மற்றும் வினோதமான அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் பயனர்கள் தங்களுக்கு என ஒரு பிரத்யேகக் கோடை உருவாக்கிக் கொள்ள முடியும். இரு கணக்குகள் ஒன்றையொன்று பின்தொடரவில்லை என்றாலும் அல்லது மெசேஜ் பாக்ஸ் மூடப்பட்டிருந்தாலும், இந்தக் கோடைப் பயன்படுத்தி நேரடியாக மெசேஜ் அனுப்பவோ அல்லது அழைப்புகளை மேற்கொள்ளவோ முடியும். பொதுவாக புதிய நபர்களிடம் இருந்து வரும் மெசேஜ்கள் 'மெசேஜ் ரிக்வெஸ்ட்' பகுதிக்குச் செல்லும். ஆனால், எக்ஸ் நம்பர் கோட் மூலம் அனுப்பப்படும் செய்திகள் நேரடியாக முதன்மை இன்பாக்ஸிற்கே செல்லும்.

கட்டுப்பாடு

பயனர்களின் முழுக் கட்டுப்பாடு

எக்ஸ் நம்பர்ஸ் அம்சம் முற்றிலும் விருப்பத்தின் அடிப்படையிலானது. பயனர் விரும்பும் நபர்களுடன் மட்டுமே இந்தக் கோடைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஒருவேளை அந்த எண் பிறருக்கு தவறாகப் பகிரப்பட்டால், பயனர்கள் அந்த எண்ணை உடனடியாக நீக்கவோ அல்லது புதிய கோடிற்குப் புதுப்பிக்கவோ செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

1. எக்ஸ் தளத்தின் 'Chat' பகுதிக்கு சென்று, தேவைப்பட்டால் சாட் PIN பதிவிட வேண்டும்.

2. இன்பாக்ஸின் டிராப்டவுன் மெனுவிலிருந்து 'Number' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

3. அதில் 'Enabled' என்பதை ஆன் செய்வதன் மூலம் உங்களுக்கான பிரத்யேக கோடை பெற்று பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

ADVERTISEMENT