அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக முன்னாள் ஆஸி. கேப்டன் நியமனம்
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் பிக் பாஷ் லீக்கில் (பிபிஎல்) புதிய சீசனுக்கு முன்னதாக அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராக சேர்ந்துள்ளார்.
முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும் ஸ்ட்ரைக்கர்ஸ் பயிற்சியாளருமான ஜேசன் கில்லெஸ்பி, கடந்த சீசனின் இறுதியில் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டிம் பெய்ன், அணிக்கு சாதகமாக மாறக்கூடும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிம் ஒரு அற்புதமான பயிற்சியாளராக இருப்பதற்கான அனைத்து திறன்களையும் கொண்டுள்ளார்.
அவர் கொண்டு வரும் அனுபவம், விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் எங்கள் வீரர்களுக்கு உதவுவதுடன், நாங்கள் விளையாடும் விதத்திற்கு மேலும் சாதகமான கூறுகளை கொண்டு வரும்." என்று தெரிவித்தார்.
tim paine records in cricket
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் டிம் பெய்ன் அனுபவம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவரான டிம் பெய்ன், சுமார் 18 ஆண்டுகள் 400க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட உள்ளார்.
டிம் பெய்ன் 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதோடு, 23 போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக அணியை வழிநடத்தியுள்ளார்.
பிக்பாஷ் லீக்கை பொறுத்தவரை, 44 முறை ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி, ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 91 ரன்களுடன், ஒட்டுமொத்தமாக 1,100 ரன்களுக்கு மேல் எடுத்தார்.
அணியின் பெண் ஊழியருக்கு பாலியல் ரீதியாக எஸ்எம்எஸ் அனுப்பிய சர்ச்சையில் சிக்கி, கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலிய கேப்டன் பதவியில் இருந்து பெயின் விலகினார். மேலும், கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.