உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிய முதியவர்
83 வயதான ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஸ்டீல் முதுகில் உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டருடன் கிரிக்கெட் விளையாடும் காணொளி வைரலாகி வருகிறது. விக்கெட் கீப்பர் பேட்டரான அலெக்ஸ் ஸ்டீல் 1967இல் இங்கிலாந்து கவுண்டி அணியான லங்காஷயருக்கு எதிராக ஸ்காட்லாந்து அணியில் அறிமுகமானார். வயதானாலும் கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் தொடர்வதால், ஃபோர்ஃபர்ஷைர் கிரிக்கெட் கிளப் அணிக்காக இன்னும் விளையாடி வருகிறார். 2020 முதல் இடியோபாடிக் நுரையீரல் ஃபைப்ரோஸிஸ் எனும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டாலும், அது எதுவும் அவர் கிரிக்கெட் விளையாடுவதை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், அலெக்ஸ் ஸ்டீல் சமீபத்தில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டரை கட்டிக்கொண்டு விக்கெட் கீப்பிங் செய்ய, இதை படம்பிடித்த கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.