Page Loader
நியூசிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பயிற்சி முகாமில் இணைந்த கேன் வில்லியம்சன்
மீண்டும் நியூசிலாந்து அணியின் பயிற்சி முகாமில் இணைந்த கேன் வில்லியம்சன்

நியூசிலாந்து அணிக்கு குட் நியூஸ்; மீண்டும் பயிற்சி முகாமில் இணைந்த கேன் வில்லியம்சன்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 04, 2023
07:48 pm

செய்தி முன்னோட்டம்

கேன் வில்லியம்சன் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். இருப்பினும், தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட்டின் கூற்றுப்படி, அவரது உடற்தகுதி சர்வதேச அளவில் போட்டியிடும் வீரருக்கு ஏற்ற வகையில் இல்லை எனத் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பங்கேற்றபோது வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்தை சரிசெய்வதற்காக கடந்த சில காலமாக கேன் வில்லியம்சன் ஓய்வில் இருந்து வருகிறார். அவர் தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தாலும், தான் முழுமையாக மீண்டு வர இன்னும் சில காலம் ஆகும் என கேன் வில்லியம்சன் சமீபத்தில் கூறியிருந்தார்.

kane williamson prepares for odi world cup 2023

ஒருநாள் உலகக்கோப்பைக்கு தயாராகும் கேன் வில்லியம்சன்

அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்கும் வகையில் உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளார். ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக, நியூசிலாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக ஒயிட் பால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளன. இந்த போட்டிகளில் கேன் வில்லியம்சன் இடம்பெறவில்லை என்றாலும் அதற்கான பயிற்சி முகாமில் கேன் வில்லியம்சனும் பங்கு பெற்றுள்ளார். அவர் பயிற்சியில் ஈடுபடும் காணொளியை வெளியிட்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், கேன் வில்லியம்சனின் உடற்தகுதி குறித்து பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறிய தகவலையும் பகிர்ந்துள்ளது.