Page Loader
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார் ஜோதி யர்ராஜி
உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார் ஜோதி யர்ராஜி

உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றார் ஜோதி யர்ராஜி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 05, 2023
11:40 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் ஜோதி யர்ராஜி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சீனாவின் செங்டுவில் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 23 வயதான ஜோதி, முன்னதாக கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த 61வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் 12.82 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்ற நிலையில், தற்போது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 12.78 வினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார். இதன்மூலம், பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தனது சொந்த தேசிய சாதனையை மேம்படுத்தினார். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை இரண்டு பதக்கங்களுடன், இந்தியா தற்போது 11 தங்கம், 5 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஜோதி யர்ராஜி வெண்கலம் வென்றார்