
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரணாய் எச்.எஸ்.
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 500 பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய வீரர் பிரணாய் எச்.எஸ்., இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக, பிரணாய் எச்.எஸ். அரையிறுதியில் சக இந்திய வீரரான பிரியன்ஷூ ரஜவாத்தை எதிர்கொண்டு 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
பிரணாய்க்கு இது நடப்பு சீசனின் இரண்டாவது சூப்பர் 500 இறுதிப் போட்டியாகும். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை எதிர்கொள்கிறார்.
சுவாரஸ்யமாக, சமீபத்தில் நடந்த மலேசிய மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியிலும் பிரணாய் வெங் ஹாங் யாங்கை எதிர்கொண்டிருந்தார்.
அதில் பிரணாயை தோற்கடித்து, வெங் ஹாங் யாங் ஆறு ஆண்டுகளில் தனது முதல் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
பிரணாய் எச்.எஸ். இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
𝐓𝐇𝐄 𝐁𝐄𝐀𝐒𝐓 𝐄𝐍𝐓𝐄𝐑𝐒 𝐅𝐈𝐍𝐀𝐋 🤩💥
— BAI Media (@BAI_Media) August 5, 2023
2️⃣nd Super 500 final on #BWFWorldTour this year 🚀
📸: @badmintonphoto #AustraliaOpen2023#IndiaontheRise#Badminton pic.twitter.com/YTUyVeYeky