Page Loader
ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் உயிருடன் உள்ளார்; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒலங்கா
ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் உள்ளார்

ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் கேப்டன் உயிருடன் உள்ளார்; வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒலங்கா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2023
11:56 am

செய்தி முன்னோட்டம்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, 49 வயதான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) காலமானதாக தகவல் வெளியான நிலையில், பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த தகவல் உண்மையில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹீத் ஸ்ட்ரீக்குடன் விளையாடிய முன்னாள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹென்றி ஒலங்கா, ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினார். இதுகுறித்து ஒலங்கா தனது எக்ஸ் பதிவில், "ஹீத் ஸ்ட்ரீக்கின் மறைவு பற்றிய வதந்திகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். நான் அவரிடம் பேசியுள்ளேன். மூன்றாவது நடுவர் அவரை திரும்ப அழைத்துள்ளார். அவர் மிகவும் நன்றாக உயிருடன் இருக்கிறார் நண்பர்களே." எனத் தெரிவித்துள்ளார்.

heath streak and henry olonga journey in cricket

ஹீத் ஸ்ட்ரீக் மற்றும் ஹென்றி ஒலங்காவின் கிரிக்கெட் பயணம்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் பொற்காலம் என வர்ணிக்கப்படும் கால கட்டத்தில் ஹீத் ஸ்ட்ரீக் மற்றும் ஹென்றி ஒலங்கா ஆகிய இருவரும் ஒன்றாக அணியில் விளையாடியுள்ளனர். 1999 மற்றும் 2003 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியை சூப்பர் சிக்ஸ் கட்டங்களுக்கு முன்னேற்றிச் சென்றதில் இருவருக்கும் அதிக பங்குண்டு. எனினும், அதன் பிறகு அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால் அணி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்ததோடு, இவர்களது கிரிக்கெட் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயுடன் போராடி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவர் மரணப்படுக்கையில் போராடியதாகக் கூறப்படும் நிலையில், தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும், விரைவில் பூரண குணமடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஹென்றி ஒலங்காவின் எக்ஸ் பதிவு