Page Loader
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?
உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியின் முதல் ஆட்டம் டிரா; இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெறுவாரா பிரக்ஞானந்தா?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2023
11:25 am

செய்தி முன்னோட்டம்

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்த FIDE செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் ஆட்டம் டிராவில் முடிந்ததது. இதில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்ட நிலையில், 35 நகர்வுகளுக்குப் பிறகு போட்டி டிரா ஆனது. பிரக்ஞானந்தா வெள்ளைக் காய்களுடன் விளையாடி, போட்டியின் தொடக்கத்தில் சரியான நேரத்தில் முன்னேறினார். ஆனால் பின்னர் கார்ல்சனின் திட்டமிடலை சரியாக எதிர்கொள்ள முடியாமல் கடைசி நேரத்தில் பின்தங்கினார். இதையடுத்து புதன்கிழமை (ஆகஸ்ட் 23) இறுதிப்போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் மீண்டும் கார்ல்சனுடன் மோத உள்ளார். இதற்கிடையே, இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம், கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளைய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார்.

ட்விட்டர் அஞ்சல்

இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா-மேக்னஸ் கார்ல்சன் மீண்டும் மோதல்