Page Loader
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா
செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா

செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி : இரண்டாவது சுற்று ஆட்டமும் டிரா

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2023
06:59 pm

செய்தி முன்னோட்டம்

பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் மோதிய செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 22) நடந்த முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், புதன்கிழமை இரண்டாவது சுற்று ஆட்டம் நடந்தது. முதல் சுற்று ஆட்டம் 35 நகர்வுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இரண்டாவது சுற்று ஆட்டம் 30 நகர்வுகளுடன் டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை நடக்க உள்ள டை-பிரேக்கர் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் ஆகிய இருவரில் ஒருவர் வெற்றி பெறுவார். இதற்கிடையே, இந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியதன் மூலம் கனடாவில் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் 2024 போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இரண்டாவது சுற்று போட்டி டிரா