
ரசிகர்களே ரெடியா? ஒருநாள் உலகக்கோப்பை மஸ்கட்டிற்கு பெயர் வைக்க ஐசிசி அழைப்பு
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 19) 2023 ஒருநாள் உலகக்கோப்பைக்கான மஸ்கட்டை ஐசிசி வெளியிட்டது.
தற்போதைய யு19 உலகக்கோப்பை இந்திய அணிகளின் கேப்டன்களான யாஷ் துல் மற்றும் ஷஃபாலி வர்மா முன்னிலையில் ஆண் மற்றும் பெண் என ஜோடியாக இரட்டை மஸ்கட் வெளியிடப்பட்டது.
இந்த மஸ்கட்டிற்கு ஐசிசி பெயர் எதையும் வைக்கவில்லை என்றாலும், ஆண் மற்றும் பெண் மஸ்கட்கள் பாலின சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய இரண்டின் அடையாளங்களாக நிற்கும் தனித்துவமான பண்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உள்ளது.
ஐசிசி மஸ்கட்டை பெயர் வைக்காமல் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இவற்றுக்கு சிறந்த பெயரிடுவதற்கான போட்டியையும் அறிவித்துள்ளது.
அதன்படி, ஆகஸ்ட் 27க்குள் உலகக் கோப்பை மஸ்கட்டிற்கு ரசிகர்கள் தங்கள் பரிந்துரையை வழங்க ஐசிசி கேட்டுக்கொண்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மஸ்கட்டை அறிமுகம் செய்தது ஐசிசி
The two #CWC23 mascots are here 😍
— ICC (@ICC) August 19, 2023
Have your say in naming this exciting duo 👉 https://t.co/AytgGuLWd5 pic.twitter.com/7XBtdVmtRS