Page Loader
யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக்
யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக்

யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 18, 2023
01:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை ப்ரியா மாலிக், யு20 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற சாதனை படைத்துள்ளார். யு20 உலக சாம்பியன்ஷிப் தொடரில் 76 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட ப்ரியா மாலிக், ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பட்டத்தை வென்றுள்ளார். இது அவருக்கு முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டமாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு நடந்த யு20 உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்டிம் பங்கல் இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்திருந்தார். இதற்கிடையே, அந்திம் பங்கல், சவிதா, அந்திம் குண்டு ஆகியோரும் தங்களது எடைப்பிரிவுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்தியா மேலும் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

யு20 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் ப்ரியா மாலிக்