பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது ஸ்பெயின்
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றது.
போட்டியின் முதல் பாதியில், இங்கிலாந்து கோல் கீப்பர் மேரி ஏர்ப்ஸை முறியடித்து ஓல்கா கார்மோனா ஸ்பெயினிற்காக முதல் கோலை அடித்தார்.
இரண்டாவது பாதியில் ஸ்பெயினுக்கு பெனால்டி கார்னர் மூலம் மேலும் ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், அதை இங்கிலாந்து கோல்கீப்பர் மேரி ஏர்ப்ஸ் முறியடித்தார்.
இதற்கிடையே, இங்கிலாந்து அணியின் கோல் முயற்சிகள் எதுவும் பலனளிக்காததால், இறுதியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், ஜெர்மனிக்குப் பிறகு ஆடவர் மற்றும் மகளிர் உலகக்கோப்பை இரண்டையும் வென்ற இரண்டாவது நாடு என்ற பெருமையையும் ஸ்பெயின் பெற்றது.
ட்விட்டர் அஞ்சல்
சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்
SPAIN ARE WORLD CHAMPIONS!!! 🇪🇸#BeyondGreatness | #FIFAWWC pic.twitter.com/x4liWtvgpN
— FIFA Women's World Cup (@FIFAWWC) August 20, 2023