ஆசிய கோப்பையில் சிறப்பாக செயல்பட தீ மிதித்த வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நயீம்
செய்தி முன்னோட்டம்
ஆசிய கோப்பை 2023 இன்னும் 10 நாட்களில் தொடங்கும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் முகமது நயீம் மேற்கொண்ட ஒரு பயிற்சி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நயீம் தனது மன உறுதியை மேம்படுத்துவதற்கான தீ மிதிக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வித்தியாசமான பயிற்சியை மேற்கொள்ள உதவியாக இருந்த சபித் ரெய்ஹானுக்கு முகமது நயீம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் அணி வீரர்களான தஸ்கின் அகமது மற்றும் நூருல் ஹசன் சோஹன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை, 23 வயதான முகமது நயீம் வங்கதேச அணிக்காக இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி நான்கு போட்டிகளில் விளையாடி 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
தீ மிதிக்கும் கிரிக்கெட் வீரர் முகமது நயீம்
Naim Sheikh working with a mind trainer ahead of Asia Cup. pic.twitter.com/mkykegJ06p
— Saif Ahmed 🇧🇩 (@saifahmed75) August 18, 2023