
ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
செய்தி முன்னோட்டம்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆசிய கோப்பைக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் நேபாளத்தை எதிர்கொள்ளும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் 2 ஆம் தேதி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது.
அயர்லாந்து டி20 தொடரின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பிய ஜஸ்ப்ரீத் பும்ரா ஆசிய கோப்பையிலும் இடம் பெற்றுள்ளார்.
இதற்கிடையில், கடந்த ஐபிஎல்லின்போது ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுள்ள கேஎல் ராகுலும் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.
இன்னும் 40 நாட்களில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் பங்கேற்க உள்ள நிலையில், இது அணிக்கு கூடுதல் பலத்தைக் கொடுத்துள்ளது.
india squad for asia cup 2023
ஆசிய கோப்பையில் இடம் பெறும் வீரர்கள் பட்டியல்
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் வழக்கமான கேப்டனாக ஹர்திக் பாண்டியா மாறியுள்ள நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான எதிர்காலமும் ஹர்திக் பாண்டியாதான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காயம் காரணமாக அணியில் இடம்பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது ஷமி. சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (பேக் அப்)