
ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு முன்னேறிய ஷுப்மன் கில்
செய்தி முன்னோட்டம்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இந்தியாவின் ஷுப்மன் கில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், ஆகஸ்ட் 1 அன்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் மூன்று இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து ஒரு அரைசதத்துடன் 126 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம், புதன்கிழமை (ஆகஸ்ட் 23) புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமானை முந்தி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதற்கிடையே மூன்றாவது இடத்தில் இருந்த ஃபகர் ஜமான் 2 இடங்கள் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
virat kohli ranks in 9th position
பேட்டிங் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் விராட் கோலி
ஐசிசி பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் உள்ள நிலையில், இந்திய வீரர்களில் ஷுப்மன் கில்லுக்கு அடுத்தபடியாக விராட் கோலி ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 11வது இடத்தில் உள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் 31வது இடத்திலும், இஷான் கிஷன் 35வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் பந்துவீச்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஒரு இடம் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ள நிலையில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பத்தாவது இடத்தில் உள்ளார்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில், டாப் 10 இடங்களில் இந்திய வீரர்கள் யாரும் இல்லாத நிலையில், ஹர்திக் பாண்டியா 11வது இடத்தில் உள்ளார்.