
பிபா மகளிர் உலகக்கோப்பை 2023 : வெண்கலம் வென்றது ஸ்வீடன் கால்பந்து அணி
செய்தி முன்னோட்டம்
பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பையில் ஸ்வீடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 19) நடந்த இந்த போட்டியில் ஸ்வீடன் ஃபிரிடோலினா ரோல்போ மற்றும் கொசோவரே அஸ்லானி ஆகியோர் கோல் அடித்ததன் மூலம், ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஸ்வீடன் முன்னதாக அரையிறுதியில் ஸ்பெயினிடம் தோல்வியைத் தழுவினாலும், தற்போது ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தாங்கள் தோற்கடிக்க கடினமான அணி என மீண்டும் நிரூபித்துள்ளனர்.
மறுபுறம், ஆஸ்திரேலியா அரையிறுதியில் இங்கிலாந்திடம் 1-3 என தோல்வியைத் தழுவிய நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கோல் ஏதும் எடுக்காமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மகளிர் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வெண்கலம் வென்றது ஸ்வீடன்
Sweden beat co-hosts Australia to finish third at the Women’s World Cup for the fourth time ever 🥉🇸🇪 pic.twitter.com/QdsMm2jDkn
— B/R Football (@brfootball) August 19, 2023