'தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்'; ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு வேற லெவல் வரவேற்பு கொடுத்த ஐசிசி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடமாக கிரிக்கெட்டில் பங்கேற்காமல் இருந்த பும்ரா, அயர்லாந்து கிரிக்கெட் அணியுடன் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளார். மேலும், இந்த அணிக்கு பும்ரா கேப்டனாக செயல்பட உள்ள நிலையில், அவரை வரவேற்று ஐசிசி எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் பும்ராவின் புகைப்படத்துடன் "தி லார்ட் ஆஃப் ஸ்விங்-தி ரிட்டர்ன் ஆஃப் தி கிங்" என தெரிவித்துள்ளது.
உடற்தகுதியை பேன வலியுறுத்திய பும்ரா
அயர்லாந்து கிரிக்கெட் அணியுடனான போட்டி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18) தொடங்கும் நிலையில், போட்டிக்கு முந்தைய விளக்கக்காட்சியில் பேசிய பும்ரா, உடற்தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அப்போது பேசிய பும்ரா மேலும், "நீங்கள் உங்கள் உடலை மதிக்க வேண்டும் மற்றும் மீட்க நேரம் கொடுக்க வேண்டும். எனது உடல் மீட்கப்பட்ட தருணத்தில் நான் அதை புரிந்துகொண்டேன்." என்று கூறினார். முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு விளையாடவில்லை. மேலும் கடந்த மார்ச் மாதம் முதுகு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இந்த காலகட்டத்தில், ஆசிய கோப்பை, டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் உள்ளிட்ட பல முக்கிய தொடர்களை இழந்தார்.