மு.க ஸ்டாலின்: செய்தி
17 நாட்கள் பயணம்..18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்: அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு நாடு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.
மீண்டும் தமிழகத்திற்கு வருகிறதா ஃபோர்ட் நிறுவனம்? அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு நிறுவனத்தை வரவேற்க திட்டமிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அமெரிக்காவில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ரூ.2666 கோடி முதலீடு, 5365 பேருக்கு வேலைவாய்ப்பு: சிகாகோவில் பெரும் நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஒப்பந்தம்
ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 பணியிடங்கள் உருவாக்கப்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மேலும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்றவை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார்.
பள்ளிகளில் 'தன்னம்பிக்கை' சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
அண்மையில், அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்த உறுதிமொழிகள் தொடர்பான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை தூண்டியது.
பாராலிம்பிக்ஸ் 2024: உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகங்களுக்கான இ-பில்லிங் இயந்திரங்கள் வாங்க டெண்டர் அறிவிப்பு
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார்.
சிகாகோவில் தமிழர்களுடன் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார்.
வாழை படத்தை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டிய மு.க ஸ்டாலின்; நன்றி தெரிவித்த இயக்குனர்
இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கியுள்ள 'வாழை' திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. படம் வெளியானதிலிருந்து பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக உயர்த்துவோம்: முதலைமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை தீவுத்திடலில் இரு தினங்களுக்கு முன்னர் தொடங்கிய பார்முலா 4 கார் பந்தயம் நேற்று வெற்றிகரமாக நிறைவடைந்ததது.
தூத்துக்குடி பட்டாசு ஆலை விபத்து; பலியானவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
தூத்துக்குடியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர்.
தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்; யாரையெல்லாம் சந்திக்கிறார்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்த்து வரும் நோக்கில் இன்று அமெரிக்காவிற்கு பயணமாகிறார்.
மூன்றாண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை செய்த சாதனை என்ன? முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பழனியின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கலைஞர் எனும் தாய் புத்தகம் வெளியீடு; முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த 'கலைஞர் எனும் தாய்' புத்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது; முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பழனியில் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும் காவலர்களுக்கு சொந்த ஊரிலே போஸ்டிங்: முதல்வர் ஸ்டாலின்
தமிழக காவல்துறை சார்பில் நடைபெற்ற குடியரசுத்தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
UPSC லேட்டரல் என்ட்ரி நியமனம் ரத்து குறித்து தமிழக முதல்வர் கூறுவது என்ன?
யுபிஎஸ்சி ஆணையம் மத்திய அரசின் 45 பதவிகளுக்கான லேட்டரல் என்ட்ரி மூலம் ஆட்சேர்ப்பு விளம்பரத்தை வெளியிட்டது.
தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்?
தமிழக முதல்வரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.
சிவ்தாஸ் மீனா இடமாற்றம்; தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐஏஎஸ்
தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்தவர் சிவ்தாஸ் மீனா. இவர் தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி; பிரதமர் மோடி புகழாரம்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற உள்ளது.
மூன்று தலைமுறை மக்களின் கனவு; அத்திக்கடவு அவினாசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மக்களுக்கு மலிவு விலையில் மருந்தகம்; முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் புதிய திட்டம் அறிவிப்பு
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் "முதல்வர் மருந்தகம்" என்ற திட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார்.
உயர்கல்வி படிக்கும் சிறுவர்களுக்கான மாதாந்திர உதவித் திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசுப் பள்ளிகளில் படித்து முடித்து உயர்கல்வி படிக்கும் ஆண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக அவரது அரசுமுறைப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தை திடீர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்த கிளாசிக் வீடியோ
இன்று, ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. அதுநாள் வரை மெட்ராஸ் ஸ்டேட் எனக்குறிப்பிடப்பட்ட பெயரை மாற்றக்கோரி பல தொடர் போராட்டங்கள் நடைபெற்றதை அடுத்து, 1968-இல், ஜூலை 18 அன்று நாடாளுமன்ற மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
மகளிர் உரிமை தொகைக்கு கூடுதல் பெண்கள் தகுதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசின் சார்பில், தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதியுள்ள 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை தரப்பட்டுவருகிறது.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடுமபத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்.
ஓசூரில் 2ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.
கருணாநிதி 101-வது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்து வீடியோ
மறைந்த தமிழக முதலமைச்சரும், மூத்த திமுக தலைவருமான கருணாநிதியின் 101 -வது பிறந்தநாள் இன்று.
நெல்லை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
கோடை மழையால் தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
"உழைக்கும் தொழிலாளர்கள் உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்": முதல்வர் ஸ்டாலின்
நாளை உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை கஞ்சா பொட்டலத்துடன் சந்திக்க வந்த பாஜக நிர்வாகி; மதுரையில் பரபரப்பு
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடந்து முடிந்தாலும், மாநிலத்தில் இன்னும் தேர்தல் கட்டுப்பாடுகள் அமலிலேயே உள்ளது.
வீடியோ: தேர்தல் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலினுக்கு மைசூர்பாக்கை பரிசாக வழங்கிய ராகுல் காந்தி
மக்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நேற்று இரவு சிங்காநல்லூரில் உள்ள இனிப்பு கடைக்கு சென்றார்.
பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
இன்னும் ஒரு வாரத்தில், அதாவது வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.