Page Loader
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது 

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கியது 

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2024
09:52 am

செய்தி முன்னோட்டம்

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை மாணவர்களுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு உருவாக்கியத் திட்டம்தான் காலை உணவுத் திட்டம் - அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தைகூட பசியோடு பள்ளியில் தவிக்கக்கூடாது என இத்திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புனித அன்னாள் பள்ளியில் இத்திட்டத்தை துவக்கி வைத்த ஸ்டாலின், குழந்தைகளுடன் அமர்ந்து உணவு பரிமாறினார்.

ட்விட்டர் அஞ்சல்

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு 

தமிழகம் 

காமராசரின் பிறந்த நாளை முன்னிட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது

மறைந்த முதல்வர் கே.காமராசரின் பிறந்த நாளன்று இத்திட்டத்தின் விரிவாக்கம் செய்லபடுத்தப்பட்டுள்ளது. கே.காமராசரின் பிறந்த நாளை மாநில அரசு 'கல்வி வளர்சி நாள்' என்று கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையால் மாநிலம் முழுவதும் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் உள்ள 2,23,536 குழந்தைகள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் உதவி பெறும் பள்ளிகளை கொண்டு வருவதன் மூலம், மொத்தம், 21.87 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள். மேலும், இத்திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும்.