3 நிறுவனங்கள், ரூ.850 கோடி முதலீட்டிற்கான MOUகள்: முதலமைச்சர் ஸ்டாலினின் சிகாகோ பயண ஹைலைட்ஸ்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள அமெரிக்கா சுற்றுப்பயணத்தில் பல பன்னாட்டு நிறுவனங்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். முதலைமைச்சரின் இந்த பயணத்தின் மூலம் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 850 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன என செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. இதன் மூலம் 4,100 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இது 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகங்களை அமைக்கப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஓமியம் நிறுவனத்துடன் 400 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் எலக்ட்ரோலைசலர்கள் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டை நோக்கி வரும் முதலீடுகளும், MOUக்களும்
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டுடன் விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் Sensors and Transducers உற்பத்தி மையத்தை 100 கோடி ரூபாய் முதலீட்டுடன் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். விஸ்டியன் நிறுவனத்தின் மின்னணு உற்பத்தி மையத்தை 250 கோடி ரூபாய் முதலீட்டுடன் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். மொத்தமாக, ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.