அழகிரி மகன் துரை தயாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க வேலூருக்கு விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முன்னாள் அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துரை தயாநிதியின் உடல்நலன் குறித்து விசாரிக்க வேலூர் மருத்துவமனைக்கு நேற்று விரைந்தார். திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த துரை தயாநிதி, சில மாதங்களுக்கு முன்னர் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இந்நிலையில், மார்ச் மாதம் 14ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரை தயாநிதி. இந்த நிலையில் அவரின் நலன் விசாரிக்கவே வேலூர் சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.