ஓசூரில் 2ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை தினந்தோறும் வெளியிட்டு வருகிறார். அதில் இன்று வெளியிட அறிவிப்பின்படி, கடந்த சில ஆண்டுகளில் பன்னாட்டு வெளியீடுகளை ஈர்த்து வரும் ஓசூர் நகருக்கென பல தொலைநோக்கு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும், கிருஷ்ணகிரி-தர்மபுரி பகுதியில் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளும் வகையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்
திருச்சியில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம்
கோவையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டார் முதலமைச்சர். தமிழ்நாட்டின் பிற பகுதிகளும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கி மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டதாகவும் கூறினார். அண்ணாவை போற்றும் வகையில் கருணாநிதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்து மகிழ்ந்தை போல, திருச்சியில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.