இந்தியாவின் தவப்புதல்வன் கலைஞர் கருணாநிதி; பிரதமர் மோடி புகழாரம்
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "இந்தியாவின் தலைசிறந்த மகன்களில் ஒருவரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இது ஒரு முக்கியமான நிகழ்வு. ஒரு அரசியல் தலைவராக கலைஞர் சமூகம், கொள்கை மற்றும் அரசியல் பற்றிய தனது ஆழமான புரிதலை வெளிப்படுத்தி, மக்களால் பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக இந்திய வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்தவர்." என புகழாரம் சூட்டியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் கடிதத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.