முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும்விதமாக அவரது அரசுமுறைப் பயணம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டோரை சந்தித்து அவர் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாதமே அவர் அமெரிக்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், பிற முக்கிய பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அவர் கோட்டையில் கொடியேற்ற உள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்ப்படலாம் என தகவல்
எனவே அதை முடித்துவிட்டு, வரும் 22ஆம் தேதி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்ல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அவர் 10 நாட்கள் அமெரிக்கா சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, அவர் அமெரிக்காவுக்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர் அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்ப்படலாம் என்று பேசப்படுகிறது. மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.