
பாராலிம்பிக்ஸ் 2024: உயரம் தாண்டுதல் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
செய்தி முன்னோட்டம்
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுவுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் மாரியப்பன் ஆவார்.
பாரிஸில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கிய பாராலிம்பிக்ஸ் விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த விளையாட்டு தொடரில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024
தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்।#Paralympics2024 pic.twitter.com/IhMylYwNf1