
பள்ளிகளில் 'தன்னம்பிக்கை' சொற்பொழிவு; முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த அதிரடி உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அண்மையில், அனைத்துலக முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் தமிழகத்தில் சில பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி குறித்த உறுதிமொழிகள் தொடர்பான சர்ச்சைகள் தமிழ்நாட்டில் சர்ச்சையை தூண்டியது.
அவை ஓயும் முன்னரே, அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்தப்பட்டது என புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
சென்னையின் அசோக் நகரில் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரே நேரத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றன.
'தன்னம்பிக்கை' என்ற தலைப்பில், மகாவிஷ்ணு என்பவர் 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார்.
அவர் மாணவர்களுக்கு யோக தீட்சை வழங்குவதும், மறுபிறவி குறித்த கருத்துக்களும் கூறியதாகக் கூறப்படுகிறது, மேலும் இது கடந்த கால பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டது என்ற கூறியதும் விவாதங்களை தூண்டியுள்ளது.
விசாரணை
விசாரணைக்கு உத்தரவிட்ட கல்வித்துறை செயலாளர்
இந்த உரைகள் ஆசிரியர்களிடையே எதிர்ப்புகளை கிளப்பியுள்ளன, அவர்கள், இது மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் யார் என்பதைப் பற்றிய முழுமையான விசாரணை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
சென்னையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுமதி வழங்கியதா அல்லது தனிப்பட்ட முறையில் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டாரா என்பது தெளிவாகவில்லை.
அதேசமயம், கல்விக்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளை அரசுப் பள்ளிகளில் நடத்துவது சட்டப்படி தவறானது என்பதற்கான எச்சரிக்கையை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் விடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து விளக்கம் பெறுவதற்கான ஆணை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
முதல்வர் ஸ்டாலினின் கருத்து
இந்த விவகாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு சென்றதும், அவர் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர் வெளியிட்ட அறிவிப்புகளில், "பள்ளி மாணவர்களுக்கு முற்போக்கான மற்றும் அறிவியல் அடிப்படையிலான கருத்துகளை வழங்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளை குறுந்தொகுப்புப் படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும். தனிமனித முன்னேற்றம், நெறிமுறைகள், மற்றும் சமூக மேம்பாட்டுக்கான கருத்துகளை மாணவர்களில் வளர்க்க வேண்டும்" எனக்கூறியுள்ளார்.
"அறிவியல் வழியே முன்னேற்றத்தை அடையலாம், மேலும் சிறந்த அறிவியல் சிந்தனைகள் நமது பாடநூல்களில் இடம்பெற்றுள்ளன. மாணவர்களின் அறிவாற்றலை கூர்மையாக்க செய்ய தேவையான கருத்துக்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். தேவையான புத்தாக்க பயிற்சிகளை சமூக கல்வி துறை வல்லுனர்களால் வழங்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
முதல்வர் ஸ்டாலின் ட்வீட்
மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.
— M.K.Stalin (@mkstalin) September 6, 2024
எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.…