
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் வைத்து பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
கே ஆம்ஸ்ட்ராங் நேற்று அவரது வீட்டின் அருகே பைக்கில் வந்தவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இது குறித்து பேசியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் குறித்து விரைவாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது. அந்த கொலையில் தொடர்புடையவர்களை இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர். ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம்
"வலுவான தலித் குரல்": ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை குறித்து பதிவிட்ட மாயாவதி
மேலும், "இந்த வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நேற்று ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை குறித்து பதிவிட்டிருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, அவரது கொலை வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தார். மேலும், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று அவர் மாநில அரசுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
"தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தலைவரான திரு கே ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. ஒரு வக்கீலான அவர், தமிழக்தில் ஒரு வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு. குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்," என்று மாயாவதி தெரிவித்திருந்தார்.