தமிழக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்; யார் இவர்?
செய்தி முன்னோட்டம்
தமிழக முதல்வரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.
அவர் இடத்தில் தற்போது உமாநாத் IAS பதவி ஏற்கிறார்.
முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் யார்? அவரை பற்றி சில தகவல்கள்.
ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி வந்தவர் தான் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத்.
2001-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்த உமாநாத், 2010-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்.
அப்போது அவர் மேற்கொண்ட ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தான் அவரை முதல்வரின் தனி செயலாளராக முதல்வரே தேர்வு செய்யும் அளவிற்கு கொண்டு சேர்த்தது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்
— Sun News (@sunnewstamil) August 20, 2024
2வது தனிச்செயலாளராக சண்முகம் ஐஏஎஸ், 3வது தனிச் செயலாளராக அனு ஜார்ஜ் ஐஏஎஸ் நியமனம்
முதலமைச்சரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக நேற்று பொறுப்பேற்றார்… pic.twitter.com/0RfpwcDzwm
செம்மொழி மாநாடு
கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி காட்டிய உமாநாத்
2010-ம் ஆண்டு கோவையில் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி பாராட்டைப் பெற்றவர் உமாநாத்.
அதேபோல அவருடைய ஆட்சி காலத்தில் அரசின் உத்தரவுக்கு கட்டுப்படாததால், அவிநாசி சாலையில் கட்டப்பட்டுவந்த மென்பொருள் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டு அதிரடி காட்டியவர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் உமாநாத் முதலமைச்சரின் முதல் தனி செயலாளராக பதவி ஏற்கிறார்.
அவர் இடத்தில், MS ஷண்முகம் IAS இரண்டாவது தனி செயலாளராகவும், அனு ஜார்ஜ் மூன்றாவது தனி செயலாளராகவும் பதவி ஏற்றுள்ளனர்.