
பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
செய்தி முன்னோட்டம்
இன்னும் ஒரு வாரத்தில், அதாவது வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக ஆட்சியின் முடிவிற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரதமரை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் அடுத்த வாரம் தமிழகத்தில் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி கடந்த 3 மாதங்களில் 8 முறை தமிழகத்திற்கு வந்து திரும்பிவிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னை தி நகரில் ஒரு பேரணியை நடத்தினர்.
பாஜகவுக்கு எதிராக இண்டியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன.
இந்தியா
'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!': மு.க.ஸ்டாலின்
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பேசி இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், "புகழ்பெற்ற LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27% பேர் Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர். இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் குவியும் செல்வம், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்." என்று கூறியுள்ளார்.