
நெல்லை விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்
செய்தி முன்னோட்டம்
கோடை மழையால் தென்மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் நெல்லை விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தால், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.
அதில்,"நெல்லையில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனை இயற்கை பேரிடராகக் கருதி முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டும்" தெரிவித்துள்ளார்.
"அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால் நெற்பயிர்களும், வைக்கோலும் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது".
"பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழுமையான நிவாரணம் கிடைத்திட ஆவன செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொளகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
embed
சபாநாயகர் அப்பாவு கடிதம்
#JUSTIN நெல்லை மாவட்டத்தில் தொடர்மழையால் நெல்பயிர் பாதிப்பு - இயற்கை பேரிடராக அறிவித்து நிவாரணம் வழங்குவமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் #Appavu #MKStalin #Nellai #Paddydamage #News18TamilNadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/ABYTFsT6fq— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 27, 2024